ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

        கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு ஆகும். அது செரிமானத்திற்கும் தொட்டியின் உற்பத்திக்கும்கழிவுகளை வெளியேற்றுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்லீரல் பாதிக்கப்படும் போது சிரோசிஸ் என்றமுற்றிய நிலை பாதிப்பு உண்டாகிறது. ஆரம்ப நிலையில் கல்லீரல் fibrosis இல் தொடங்கி நாளடைவில் முழுதும்பாதிப்படைந்த சிறு விஷயங்களில் போய் முடிகின்றது. இது மது அருந்துவோருக்கு மட்டுமின்றி உடல் பருமன்சர்க்கரை வியாதி அதிகப்படியான கொழுப்பு நச்சுப் பொருள்கள் இவை மூலமாகவும் உருவாகிறது. கல்லீரல் பாதிப்புஐம்பதிலிருந்து அறுபது சதவிகிதம் ஆன பின்பே நமக்கு இயல்பாக கண்டு பிடிக்கப் படுகின்றது. இதை அறிந்துகொள்ள முன்னதாக எந்த ஒரு பரிசோதனையும் இருந்ததில்லை. பயாப்ஸி என்ற ஊசி முறை திசு பரிசோதனைமட்டுமே fibrosis கண்டறியும் பரிசோதனையாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஃபைப்ரோஸ்கன் மூலம்வழியில்லாமல் ஊசி இல்லாமல் எளிதான முறையில் கண்டுபிடிக்க பயன்படுகிறது.

  1. ஃபைப்ரோஸ்கன் என்றால் என்ன?

இது ஒரு அல்ட்ரா சவுண்ட் ultrasound பரிசோதனை முறையாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பு மற்றும்ஃபைப்ரோஸிஸ் அளவை கண்டுபிடிக்க உதவுகிறது.

  1. ஃபைப்ரோஸ்கன் எவ்வாறு செயல்படுகின்றது?

Liver stiffness என்ற கல்லீரலின் தன்மையை அறிவதற்கு அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் துல்லியமாககணக்கிடப்படுகின்றது. கல்லீரலில் இருக்கும் கொழுப்பின் அளவையும் ஃபைப்ரோஸ்கன் அளவையும்கணிக்கின்றது.

  1. ஃபைப்ரோஸ்கன் யாருக்கு பரிந்துரை பரிந்துரைக்கப்படுகின்றது?

கல்லீரல் பாதிப்பு இருக்க வாய்ப்பிருக்கும் அனைவருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. குடிப்பழக்கம் உடையவர்அதிக உடல் பருமன் சர்க்கரை வியாதி கொழுப்புச்சத்து இருதய நோய் உடையவர்கள் போன்றவர்களுக்கு இதுபரிந்துரைக்கப்படுகிறது.

  1. ஃபைப்ரோஸ்கன் பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?

ஃபைப்ரோஸ்கன் சாதாரண அல்ட்ரா சவுண்ட் முறை போலவே பரிசோதனை செய்யப்படுகிறது. வயிற்றுப் பகுதியில்ஸ்கேன் கருவி கொண்டு கல்லீரலை நோக்கி அல்ட்ரா சவுண்டு அலைகள் செலுத்தப்படுகிறது. அந்த அலைகள்கல்லீரலில் பரவும் வேகம் மற்றும் தன்மையை வைத்து கல்லீரலில் பாதிப்பு கல்லீரலில் உள்ள கொழுப்பு மற்றும்ஃபைப்ரோஸிஸ் அளக்கப்படுகிறது. ஃபைப்ரோஸ்கேன் முற்றிலும் வலி வேதனை இல்லாத ஒரு பரிசோதனையாகும்எளிதாக 15 நிமிடத்தில் முடிந்துவிடும்.

  1. ஃபைப்ரோஸ்கன் ரிசல்ட் எப்பொழுது கிடைக்கும்?

ரிசல்ட் உடனுக்குடன் தரப்படும். கேப் ஸ்கோர் CAP score மற்றும் ஃபைப்ரோசிஸ் ஸ்கோர் fibrosis score பரிசோதனையின் முடிவில் கிடைக்கும்.

  1. கேப் ஸ்கோர் ஃபைப்ரோஸிஸ் ஸ்கோர் என்றால் என்ன? சரியான அளவு எது?

கேப் ஸ்கோர் 248 க்கு குறைவாக இருந்தால் அது கல்லீரலில் 10% கொழுப்பின் அளவை காட்டுகிறது. ஃபைப்ரோஸிஸ் ஸ்கோர் 2-6 kPa ஃபைப்ரோஸிஸ் மிக குறைந்த அளவில் இருப்பதை காட்டுகிறது.

  1. ஃபைப்ரோஸ்கன் செய்து கொள்வது எப்படி?

நமது வடமலையான் மருத்துவமனையில் மாதமிருமுறை ஃபைப்ரோஸ்கன் செய்யப்படுகிறது. முன்பதிவு முறை மூலம்எளிதாக செய்து கொள்ளலாம்.

  1. ஃபைப்ரோஸிஸ் மற்றும் கொழுப்பு இருந்தால் என்ன செய்வது?

ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் இவை இரண்டையும் சரி செய்ய முடியும். முற்றிய நிலையில் இது மற்றபாதிப்புகளை உண்டாக்கும். சிரோசிஸ் பாதிப்பு உள்ள வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

Recent Post

Gallstones – பித்தப்பை கல்

Gallstones – பித்தப்பை கல்

பித்தப்பை கல் என்றால் என்ன? அதை பற்றிய கேள்விகளும் சில முக்கிய குறிப்புகளும்.

ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர்

குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர்

Get Your Treatment

Contact Us And Get Treatment

Experienced surgical gastroenterologist with special expertise in Liver surgery, liver Transplantation.

Quicklinks

Copyright © 2021 | Designed by Guhan InfoTech