குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

         குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர், மதுரை வடமலையான் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நவீன சிகிச்சையால் நலம் பெற்றார். 
 

மதுரையைச் சேர்ந்த 66 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு, திடீரென வயிற்றுவலி ஏற்ப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஒருவார காலம் வலியுடன் வயிறு வீங்கி உணவு உட்கொள்ள முடியாமல் தவித்துள்ளார். உணவு உட்கொண்டால் உடனே வாந்தி ஏற்ப்பட்டு முற்றிலும் பலவீனமாகி நடக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அதையடுத்து சிகிச்சைக்காக வடமலையான் மருத்துவமனைக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை குடல் நோய் சிறப்பு மருத்துவர்என். எம். அலீப் பரிசோதித்த போது, வயிறு மட்டுமின்றி இரைப்பைப் பகுதியும்நன்கு வீங்கியிருந்தது தெரியவந்தது. மேலும், இரைப்பையின் அசைவும் தோல்வழியே தெரிந்தது. அதன் மூலம் அவருக்கு Gastric Outlet Obstruction ஏற்பட்டிருப்பதை மருத்துவர் அறிந்தார். இரைப்பை முடிந்து குடல் ஆரம்பிக்கும்இடம் சுருங்கினால் இப்பிரச்சினை ஏற்படும். இதனால் அதன் வழியாக உணவு, இரைப்பையில் இருந்து
 
குடலுக்குச் செல்ல முடியாத நிலை தான் இது. இப்பாதிப்பு காரணமாகத்தான் உணவு உட்கொள்ள முடியாத நிலைஏற்படுகிறது. சி.டி. ஸ்கேன் மூலமும் அவருக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
குடலின் இப்பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, நோயாளிக்கு ஏற்கனவே அல்சர் உண்டாகி, அது ஆறும் போது உண்டான தழும்பினால் குடல் சுருங்கிப்போகும். இதை Benign Gastric Outlet Obstruction என்பார்கள். மற்றொன்று, கேன்சர் கட்டியினால் குடலில் அடைப்பு ஏற்படுவது. இது Maligant Gastric Outlet Obstruction எனப்படும்.
 
முதற்கட்ட சிகிச்சையாக, அவருக்கு டிரிப்ஸ் மூலம் குளுக்கோஸ் செலுத்தி உடல் தேற்றப்பட்டது. பின்னர், மூக்கு வழியாக குழாயை இரைப்பைக்குள் செலுத்தி அங்கு தேங்கியிருந்து சுமார் 3.5 லிட்டர் அளவிலான நீர்ம உணவு அகற்றப்பட்டது. இதையடுத்து நோயாளிக்கு வயிற்றுவலி வெகுவாக குறைந்தது.

Recent Post

Gallstones – பித்தப்பை கல்

Gallstones – பித்தப்பை கல்

பித்தப்பை கல் என்றால் என்ன? அதை பற்றிய கேள்விகளும் சில முக்கிய குறிப்புகளும்.

ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர்

குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர்

Get Your Treatment

Contact Us And Get Treatment

Experienced surgical gastroenterologist with special expertise in Liver surgery, liver Transplantation.

Quicklinks

Copyright © 2021 | Designed by Guhan InfoTech