Gallstones – பித்தப்பை கல்

பித்தப்பை கல் என்றால் என்ன? அதை பற்றிய கேள்விகளும் சில முக்கிய குறிப்புகளும்.

  1. பித்தப்பை கல் என்றால் என்ன ?

நமது உடலில் கல்லீரலுக்கு அடிப்பகுதியில் பித்தப்பை என்ற ஒரு சிறிய சுரப்பி ஒன்று உள்ளது ஆனால் அதுபித்தத்தை சுரப்பது இல்லை கல்லீரலில் இருந்து வரும் பித்தத்தை சேகரித்து பின்னர் உணவு உட்கொள்ளும் போதுஅதை செரிமானத்திற்காக வெளியேற்றுகிறது. பித்தம் உணவுடன் கலந்து செரிமானத்திற்கு உதவுகிறது. பித்தப்பையில் தேங்கியிருக்கும் பித்தம்  இறுகி சற்று அடர்ந்து மணல் போல மாறி பின்னர் கற்களாக உறுமாறும்.

  1. பித்தப்பை கல் யாருக்கு வரலாம்?ஏன் வருகிறது?

பித்தப்பை கல் எந்த வயதினரையும் பாதிக்கலாம். சிறுவர் பெரியவர் அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒரு வியாதியாகஇருக்கின்றது. பெண்கள் சிறிது அதிகப்படியாக பாதிக்கப்படுகிறார்கள். பித்தத்தில் அதிகக் கொழுப்பு மற்றும் பித்தப்பையின் செயல்பாடு குறைவதனால் பித்தப்பை கல் வருகின்றது.

  1. யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

அதிக கொழுப்பு உள்ள உணவுகளை உண்பவர்கள் கர்ப்பிணி பெண்கள் குறைந்த காலத்தில் உடல் எடையைகுறைப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள் உடல் பருமன் உடையவர்கள் போன்றவர்களுக்கு பித்தப்பை கல்வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  1. சிறுநீரகக் கற்களுக்கும் பித்தப் பை கற்களுக்கு தொடர்பு உண்டா?

இல்லை இந்த இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை மேலும் கால்சியம் அதிகமாக தாலோ அல்லது நீர் குறைவாகக்குடிப்பது பித்தப்பை கல் வருவதில்லை.

பித்தப்பை கற்களால் வலி ஏற்பட்டு பித்தப்பை வீங்கும் நிலை அடையும் பொழுது அறுவை சிகிச்சையை சரியானதீர்வாக அமையும்.
  1. சிறுநீரகக் கற்களைப் போல பித்தப்பை கற்கள் மற்றும் அகற்ற முடியுமா?

பித்தப்பையில் உள்ள கோளாறினால் பித்தப்பை கல் உருவாகின்றது அதனால் பித்தப்பையை அகற்றுவதே இதற்குசரியான சிகிச்சை.

  1. ஹோமியோ சித்தா முறைகளில் இதற்கு தீர்வு உண்டு என்று கூறுகிறார்களே அது சரியா?

பித்தப் பையில் ஒரு முறை கற்கள் வந்துவிட்டால் அதனை எந்த ஒரு வகையிலும் கரைக்கவும் குறைவோ இயலாது. மேலும் இது போன்ற சிகிச்சை முறைகளால் பித்தப்பை கற்கள் மோசமான பின்விளைவுகளை கொடுக்கும் அபாயம்உள்ளது.

  1. பித்தப்பை கற்களால் உண்டாகும் பாதிப்புகள் பின் விளைவுகள் என்னென்ன?

பித்தப்பை கற்கள் வளர்ந்து பித்தப் பையின் வாயை அடைத்து பித்தப்பை வீங்கி இன்ஃபெக்ஷன் உருவாக காரணமாகஉள்ளது. அது பின்னர் செல்லமாக உருமாறி வெடித்து கல்லீரல் குடல் பகுதியில் பரவும் வாய்ப்பு உள்ளது. பித்தப்பைக்கற்கள் பித்தப்பையில் இருந்து இறங்கி பித்தக் குழாயை அடைத்தால் மஞ்சள் காமாலை வரும் கணையத்தின்குழாயை அடைத்தால் கணைய வீக்கம் வரும். இவை இரண்டும் மிக மோசமான பின்விளைவுகள் ஆகும்.

  1. சார் மெடிசன்ல மாத்திரம் குணப்படுத்த முடியுமா?

பித்தப்பை கற்களால் வலி ஏற்பட்டு பித்தப்பை வீங்கும் நிலை அடையும் பொழுது அறுவை சிகிச்சையை சரியானதீர்வாக அமையும். மெடிசன்ல மாத்திரம் குணப்படுத்த முடியாது. பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதேபித்தப்பை நோய்க்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான சிகிச்சையாகும்.

தக்காளி முட்டைகோஸ் புரதச்சத்து போன்றவற்றை தவிர்க்க வேண்டுமா?
  1. பித்தப்பை எவ்வாறு அகற்றப்படுகிறது?

பித்தப்பை அகற்றுவதற்கான பொதுவாக சிறு துளை லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையைபயன்படுத்துகிறோம்.3-5% வரையிலானவருக்கு (ஓபன்)கிழித்து செய்யும் முறையை உபயோகப்படுத்த வேண்டிவரும்.

  1. லாப்ராஸ்கோப்பி முறையில் பயன் என்ன?

லேப்ராஸ்கோபி முறையில் செய்யும் பொழுது சிறு துளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் வலிவேதனை குறைவாக உள்ளதால் ஒரே நாளில் இயல்பு நிலை அடைந்து வீட்டிற்கு அனுப்பப்படுவர்.

  1. ஒருமுறை பித்தப்பை எடுத்தால் கல் திரும்ப வருமா?

பித்தப் பையை அகற்றிய பின்னர் பித்தக்கல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. கல்லீரல் அல்லதுபித்தக் குழாய் குறைபாடு உள்ளவர்களுக்கு அதில் கற்கள் உருவாகலாம். ஆனால் ஒருமுறை பித்தப்பையை அகற்றிவிட்டால் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

  1. பித்தப்பையை அகற்றிவிட்டால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுமா?

பித்தம் என்பது நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை கல்லீரலில் இருந்து சுரக்கப்படுகிறது. அதில்சிறிதளவே (சுமார் 100- 200 மில்லி) பித்தத்தை எடுத்து அதை ஈர்த்து பித்தப்பை சேகரித்து வைக்கின்றது.பித்தப்பையை அகற்றிவிட்டாலும் செரிமானத்திற்குரிய பித்தம் கல்லீரலில் இருந்து சுரக்கப்படுகிறது. அதனால்பித்தப் பையை அகற்றிய பிறகு சிலருக்கு ஒரு மாதம் வரை இரண்டு மூன்று முறை மலம் கழித்தல் ஏற்படலாம். அதுநாளடைவில் சரியாகும்.

  1. அறுவை சிகிச்சைக்கு பின் என்ன சாப்பிடலாம்? வாழ்நாள் முழுதும் கொழுப்பு சத்து மற்றும் எண்ணெய்பொருட்களை சுத்தமாக தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்களே?

கொழுப்புச்சத்து குறைவான உள்ள உணவுகளே உணவுகளை உட்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து மற்றும்மாமிசத்தை முழுதாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அதிகமான அளவில் உட்கொள்ளுதலை தவிர்க்கவேண்டும்.

  1. தக்காளி முட்டைகோஸ் புரதச்சத்து போன்றவற்றை தவிர்க்க வேண்டுமா?

மேற்கூறியவை சிறுநீரகக் கற்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பித்தப்பை அகற்றியவருக்கு இந்த உணவுகளால்எந்த தொந்தரவும் வருவதில்லை.

  1. பித்தப்பைக் கற்களில் அறிகுறி என்ன?

வலது நெஞ்சுக்கூடு கீழே வழி வலி முதுகு பரவுதல் குமட்டல் வாந்தி காய்ச்சல் செரிமானக் கோளாறு போன்றவைஇதன் அறிகுறிகளாகும்.

 

எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் சிக்கல்கள் எதிர்பார்க்கலாம்
  1. அறுவை சிகிச்சை முடிந்து இயல்பு வாழ்க்கை எப்போது திரும்ப முடியும்?

இரண்டு நாட்களில் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ஏழிலிருந்து பத்து நாட்கள் ஓய்வு எடுத்தால் போதுமானது. பின்னர் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

  1. அறுவை சிகிச்சையில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?

எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் சிக்கல்கள் எதிர்பார்க்கலாம் லாப்ராஸ்கோப்பி முறையில் குறைவான அல்லதுசிக்கல்கள் இல்லாத நிலையை எதிர் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. முறையாக பயிற்சி பெற்று மேலும் பல அறுவைசிகிச்சைகள் செய்த அறுவை சிகிச்சை நிபுணர் செய்யும்பொழுது சிக்கல்களின் வீதம் மிகக் குறைவாக உள்ளதுஎன்று மருத்துவ ஆய்வுகள் காட்டுகின்றன.

பித்தப்பை கற்களை பற்றி மேலும் கேள்விகள் இருந்தாலோ அல்லது பித்தப் பை கற்கள் அகற்றுவதற்கு அறுவைசிகிச்சை நிபுணரை அணுக விரும்பினாலோ வடமலையான் மருத்துவமனை உங்கள் கேள்விக்கு வினா அளித்துஉங்களுக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யவும் காத்திருக்கிறது.

 

Recent Post

Gallstones – பித்தப்பை கல்

Gallstones – பித்தப்பை கல்

பித்தப்பை கல் என்றால் என்ன? அதை பற்றிய கேள்விகளும் சில முக்கிய குறிப்புகளும்.

ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

ஃபைப்ரோஸ்கன்- Fibroscan பற்றி உங்களுக்கு தெரியாத விவரங்கள்

குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர்

குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

குடல் சுருக்கத்துக்கு நவீன பலூன் சிகிச்சை!

குடல் சுருக்கத்தால் வாந்தி மற்றும் வயிற்று வலியுடன் முற்றிலும் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபர்

Get Your Treatment

Contact Us And Get Treatment

Experienced surgical gastroenterologist with special expertise in Liver surgery, liver Transplantation.

Quicklinks

Copyright © 2021 | Designed by Guhan InfoTech